சட்டப்பேரவை தேர்தலில் விசிக போட்டியிடும் 6 தொகுதிகள் என்னென்ன.?

Published by
பாலா கலியமூர்த்தி

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளின் பெயர்கள் வெளியாகியுள்ளது. 

திமுக கூட்டணியில் கடந்த ஒரு வாரமாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவடைந்து, ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகள் மற்றும் ஒரு கன்னியாகுமரி மக்களவை சீட்டு, விசிக 6, மதிமுக 6, சிபிஐ 6, சிபிஎம் 6, ஐயூஎம்எல் 3, கொ.ம.தே.க. 3, ம.ம.க. 2, த.வா.க. 1, ம.வி.க. 1, ஆதித்தமிழர் பேரவை 1 ஆகிய 60 தொகுதிகளை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, காட்டுமன்னார்கோவில், உளுந்தூர்பேட்டை, குன்னம், செய்யூர், பொன்னேரி, மற்றும் வானுரில் விசிக போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமாக இன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில், கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் அழைத்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. முழு தொகுதி பட்டியல் இன்று பிற்பகல் வெளியாகும் என கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

16 minutes ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

1 hour ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

2 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

2 hours ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

3 hours ago

தாய்லாந்து – கம்போடியா இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்.!

மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…

3 hours ago