உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பு அளித்தது.இதன் காரணமாக மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய தேதியை அறிவிக்க உள்ளது.
இந்த நிலையில் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை பாமக சார்பில் நடத்தப்பட்டது. இதன் பின்னர் பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக கூட்டணியில் எப்படி போட்டியிடுவது, எந்தெந்த தொகுதியை பகிர்ந்து கொள்வது என்பது குறித்து ஆலோசனை செய்தோம். இதனை மருத்துவர் மற்றும் அன்புமணி உடன் ஆலோசனை செய்து எங்கள் முடிவை தெரிவிப்போம். முதல்கட்ட பேச்சுவார்த்தை தான் முடிந்துள்ளது. கூட்டணி தொகுதி பங்கீடு குறித்தி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும்.இந்த கூட்டத்தில் பாமக வலுவான தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், அதிமுக வலுவான பகுதியை அவர்களுக்கு விட்டு கொடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…