திமுகவின் பொய்யில் இருந்து எப்பொழுது எங்களுக்கு ‘விடியல்’ அரசே? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.அதன்படி, இந்த விலை குறைப்பானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,கர்நாடக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை 7 ரூபாய் குறைத்திருப்பதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.அதேபோல,பல பகுதிகளிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.இதனால்,டீசல் விலை மீண்டும் 100 ரூபாய்க்கு கீழ் குறைந்தது.பெட்ரோல், டீசல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில்,இந்த விலை குறைப்பு வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி அரசு பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 குறைத்திருக்கிறார்கள்.ஆனால், உங்களுடைய பொய்யில் இருந்து எப்பொழுது எங்களுக்கு ‘விடியல்’ அரசே?, என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்ததும்,பெட்ரோலின் விலையை ரூ.5, டீசலின் விலையை ரூ. 4 விதம் குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள்.இந்த நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய அரசு பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 குறைத்திருக்கிறார்கள்.ஆனால், உங்களுடைய பொய்யில் இருந்து எப்பொழுது எங்களுக்கு ‘விடியல்’ அரசே?”,என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…