தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்… இன்று டெல்லியில் ஆலோசனைக்கூட்டம் .!

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி தேர்வு செய்யும் ஆலோசனைக்கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
தமிழகத்தின் காவல்துறையின் தலைமை இயக்குனர் பொறுப்பில் இருக்கும் டிஜிபி சைலேந்திர பாபு வரும் 30 ஆம் தேதி பணிநிறைவு பெற இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது.
புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தநிலையில் அதற்கான இறுதிக்கட்ட ஆலோசனை இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இன்று டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்பது உறுதியாகிவிடும்.
இதற்கான பட்டியலில் பரிந்துரைக்கப்ட்டவர்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த டெல்லியில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025