இணையத்தில் வைரலாகும் தளபதி விஜய்.! நள்ளிரவில் லியோ படக்குழு வெளியிட்ட வெறித்தனமான புகைப்படம்.!

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படக்குழு திரைப்படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் லியோ. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா, மிஷ்கின் என பிரபல சினிமா நட்சத்திரங்கள் உடன் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.
இன்று விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியானது. அதில் விஜய் கையில் பெரிய சுத்தியலுடன் ரத்தம் தெறிக்க தெறிக்க ஓநாய் படைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது.

இதுவரை வந்த விஜய் படங்களில் ரத்தம் தெரிக்க ஒரு முதல் படத்தின் முதல் போஸ்டர் வெளியானதில்லை. லியோ திரைப்படத்தின் வெறித்தனமான போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். மேலும், இன்று 49 வது பிறந்தநாள் காணும் விஜய்க்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. அதனால் இன்றைய தினம் இணையதளத்தில் டாப் ட்ரெண்டிங்கில் தளபதி விஜய் தான் இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
பாமகவிலிருந்து 3 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்! என்ன காரணம்?
July 20, 2025