கண்ணிமைக்கும் நேரத்தில் கணவனின் கண்முன்னே இறந்த மனைவி!திடுக்கிடும் தகவல்!

Default Image
  • கணவரின் கண்முன்னே பேருந்துக்கு பலியான மனைவி.அதிர்ச்சி அடைந்த கணவர்.
  • பேருந்து ஓட்டுனரை கைது செய்த காவல்துறையினர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி அருகே உள்ளே பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் கம்ருதீன் ஆவார்.இவரது மனைவி பாத்திமா கனி ஆவார்.இந்நிலையில் இவரது மனைவிக்கு தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக கம்ருதீன் ஆவது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவெடுத்து தனது இரு சக்கரவாகனத்தில் மனைவியை அமரவைத்து அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது செங்கல் பட்டி சுங்கச்சாவடி பகுதியில் வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்துள்ளது.இதில் கம்ருதீன் உடனடியாக அந்த இடத்தில் இருந்து எழுந்துள்ளார்.

அப்போது அந்த பகுதியில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி பேருந்து ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்துள்ளது.பேருந்து வருவதை கண்ட பாத்திமா எழுவதற்குள் பேருந்து பாத்திமாவின் மீது ஏறி இறங்கியுள்ளது.

இதில் பாத்திமா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.தனது கண்முன்னே மனைவிக்கு நடந்த கொடுமையை கனடா கம்ருதீன் கதறி அழுதுள்ளார்.இதனால் அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்து காவல்துறையினர் பாத்திமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பின்னர் நொடி பொழுதில் உயிர் தப்பிய கம்ருதீன் சிறு காயங்களின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05122024
Maharashtra cm
Somanath
colours (1) (1)
Tughlaq AliKhan
rinku singh kkr Sunil Narine