அந்த வழக்கு குறித்து தமிழக, கேரள காவல்துறையினர் கூட்டாக விசாரணை நடத்திவருகின்றனர்.இந்த வழக்கில், தெளஃபீக், அப்துல் சமீம் ஆகிய இருவர் தான் இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களுக்கு உதவியாக பலர் செயல்பட்டதாகவும், இவர்கள் தற்கொலை படை பயிற்ச்சி பெற்றவர்கள் என்பதும் விசாரணையில் அதிர வைக்கும் தகவல் வெளியானது. இந்த வழக்கு தொடர்பாக கேரளத்தில் நெய்யாற்றின்கரை, தென்மலை பகுதிகளில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் வைத்து தெளஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று இவர்கள் தமிழக காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த திங்கள்கிழமை கர்நாடக மாநிலம் பெங்களூர் ராமநகரியில் இஜாஸ் பாஷா என்றவனை கைது செய்யப்பட்டதுதான் குற்றவாளிகளை பிடிக்க எளிதாக அமைந்தது என்கிறது காவல்துரை வட்டாரம். இந்த இஜாஸ் பாஷா ஒரு டாக்சி டிரைவர் ஆவர். இவர் மும்பையில் இருந்து கொண்டு வந்த துப்பாக்கியை பெங்களூரில் வைத்து தெளஃபீக்கிடம் கொடுத்துள்ளதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து வேராவல் விரைவு ரயிலில் குற்றவாளிகள் பயணம் செய்வதாக இஜாஸ் பாஷா தகவல் கொடுத்தார். அதன்படி கர்நாடகா காவல்துறை மற்றும் தமிழ்நாடு கியூ பிரிவு காவல் துறை மற்றும் ரயில்வே காவல்துறையினரும் சேர்ந்து தெளஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோரை நேற்று கைது செய்துள்ளது.
எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தங்களுக்கு உதவி இரண்டுபேர் குறித்து தெள்ஃபீக் தெரிவித்திருக்கிறார். அவர்களை பிடிக்க இப்போது தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. இதற்கிடையில் தெளஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோரிடம் தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இவர்களின் தீவிரவாத அமைப்பில் மூன்றுபேர் தற்கொலைப்படை தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா மற்றும் டெல்லியை மையமாகக் கொண்டு இவர்கள் செயல்பட்டுள்ளனர். அல் உம்மா என்ர பயங்கரவாத இயக்கத்தை இந்திய அரசு தடை செய்ததை தொடர்ந்து தமிழ்நாடு நேஷனல் லீக் என்ற பெயரில் அமைப்பை தொடங்கியுள்ளனர்.இந்த விவகாரம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…