திருவள்ளூர் பெரும்பாக்கத்தில் அமையவுள்ள ரூ.385.63கோடியில் மதிப்பிலான புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.
மத்திய அரசு தமிழகத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை அமைக்க ஒரே நேரத்தில் 11 கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி, புதிய அரசு மருத்துவ கல்லுரிகளுக்கு முதல்வர் பழனிசாமி நேரடியாக சென்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 2 கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து திருப்பூரில் 336.98 கோடி மதிப்பிலான அமையவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி காணொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதையயடுத்து இன்று திருவள்ளூர் பெரும்பாக்கத்தில் அமையவுள்ள ரூ.385.63கோடியில் மதிப்பிலான புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு காணொலி மூலம் முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இதனிடையே கடந்த 2019ல் மத்திய அரசிடம் ஒப்புதல் பெறப்பட்ட 11 அரசு மருத்துவ கல்லுரிக்கும் முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…