27 மாவட்டங்களுக்கிடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ்/இ -பதிவு இல்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், வகை 2 மற்றும் வகை 3-ல் உள்ள மாவட்டங்களுக்கிடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ்/இ -பதிவு இல்லாமல் பயணிக்கலாம்.
வகை 1-ல் உள்ள மாவட்டங்களுக்கிடையேயும், வகை 2, 3 ஆகியவற்றில் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை 1-ல் உள்ள மாவட்டங்களுக்கு திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு, இ-பாஸ் பெற்று அனுமதிக்கப்படும்.
இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக https://eregister.tnega.org/ மணமகன் /மணமகள் அல்லது அவர்களது பெற்றோர் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
வகை 1-ல் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை-2, 3-ல் உள்ள மாவட்டங்களுக்கு திருமணத்திற்காக பயணிக்கவும் இ-பாஸ் பெறவேண்டும். திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
நீலகிரி மாவட்டம் கொடைக்கானல் ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.
வகை 1 – (11 மாவட்டங்கள்):
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்
வகை 2 – (23 மாவட்டங்கள்):
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் இராணிப்பேட்டை சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.
வகை 3- (4 மாவட்டங்கள்):
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்.
சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் ஸ்டாலின்…
பாங்காக் : தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது, அவ்வப்போது மோதலும் நடந்து…
சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் 6-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.…
பாரிஸ் : பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு 2025…
சென்னை : சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, கட்சித் தலைவர் வைகோவுக்கு…