பல் துலக்கும் பேஸ்ட்டுக்கு பதிலாக எலி விஷத்தை மாற்றி பயன்படுத்தியதால் 17 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கரியமணிகமில் 17 வயது சிறுமி பல் துலக்கும் பேஸ்ட்டுக்கு பதிலாக எலி விஷத்தை அருந்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.எரிப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் தொழில்சாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருபவர் ஜே.கல்பாந்த் .
பீகாரை சேர்ந்த இவருக்கு 17 வயதான சுவாதி என்ற மகள் உள்ளது .இவர் கல்லூரியில் சேர காத்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் அந்த சிறுமி தினமும் படுக்கைக்கு தூங்க செல்வதற்கு முன்பு பல் துலக்குவது வழக்கம் .அந்த வகையில் டிசம்பர் 1-ம் தேதியும் பல் துலக்க செல்கின்ற போது மின்வெட்டு ஏற்பட்டுள்ளது .அப்போது அவர் பல் துலக்கும் பேஸ்ட்டுக்கு பதிலாக எலி விஷத்தை எடுத்து பல துலக்க தொடங்கியுள்ளார் .
அதன் பின் சிறுமி அது பேஸ்ட் இல்லை என்பதை உணர்ந்தவுடன் உடனடியாக வாயை கழுவி பேஸ்ட் கொண்டு பல் துவக்கியுள்ளார் .அந்த நாள் சிறுமிக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் கடக்க அடுத்த நாள் சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதுடன் வாந்தியும் எடுத்துள்ளார் . உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததை ஒட்டி சிறுமி சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார் .ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதுடன் அடிக்கடி இப்பகுதியில் மின்வெட்டு ஏற்படுவதாகவும் ,அது ஒரு சிறுமியின் மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் கூறி நெட்டப்பாக்கம் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…