நீங்கள் பிரதமர் ஆகி இடும் முதல் கையெழுத்து மது விலக்குக்காக தான் இருக்கவேண்டும் என்றும் ராகுல் காந்தியிடம் ஒரு பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் இன்று இரண்டாவது கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தில். ஈடுபட்டார். இதனையடுத்து, தூத்துக்குடியில் வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின், உப்பள தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது உப்பள தொழிலாளர்கள் ராகுல் காந்தியிடம் மனம்திறந்து பேசி, தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். தொழிலாளர்கள் ராகுல் காந்தியிடம், உப்பளத் தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும், வருடத்துக்கு 7 மாதம் மட்டுமே வேலை இருக்கிறது எனவே மீதமுள்ள மாதங்களில் வருவாய்க்கு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மேலும், தூத்துக்குடியில், மதுபான கடைகள் அதிகமாக காணப்படுவதால் சம்பாதிக்கும் ஆண்கள் பணத்தை அதில் தொலைத்து விடுவதாகவும், நீங்கள் பிரதமர் ஆகி இடும் முதல் கையெழுத்து மது விலக்குக்காக தான் இருக்கவேண்டும் என்றும் ராகுல் காந்தியிடம் ஒரு பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
பின் உப்பளத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ராகுல் காந்தி, பாஜக ஆட்சியில் ஏழைகள் பரம ஏழைகளாவது, பணக்காரர்கள் பெரும் பணக்காரராவதும் தான் நடக்கிறது என்றும், உப்பள தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 72 ஆயிரம் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் ‘நியாய்’ என்ற திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…