லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்த வாலிபர் தற்கொலை !

Published by
murugan

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்து உள்ள ஏரவலம் கிராமத்தை சார்ந்த ஏழுமலை மகன் கவியரசன்(22) இவர் +2 வரை படித்து உள்ளதால் அங்கு உள்ள சக்கரை ஆலையில் கிரேன் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் ஏரவலம் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஏரியில் உள்ள கிணற்றில் இருந்து வண்டல் மணணை டிராக்டர் மூலம்  எடுப்பதாகவும், அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வளர் ஆகியோர் மண் எடுபவர்களிடம் இருந்து லஞ்சமாக ரூ.5000 வாங்கியதாகவும் ,அதை கவியரசன் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

வீடியோ எடுப்பதை பார்த்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வளர் ஆகிய இருவரும் கவியரசனிடம் இருந்து செல்போனை பிடுங்கி ஆபாசமாக திட்டி கொலை செய்து விடுவதாகவும் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கவியரசன்மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் சம்பவ இடத்திற்குவந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.மேலும் கவியரசன் தந்தை ஏழுமலைகொடுத்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
murugan
Tags: #suicide

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

17 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

1 hour ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

1 hour ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

3 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago