மெக்சிகோ : கிளாடியா ஷெயின்பாம் மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக பெரும் வெற்றியை பெற்றுள்ளார். இவர் தனது வழிகாட்டியும் தற்பொழுது அதிபராக இருக்கும் ஆண்ட்ரஸ் மனுவேல் லோபெஸ் ஓப்ரடோரின் திட்டங்களை தொடரவுள்ளார்.
கிளாடியா ஷெயின்பாம், ஒரு காலநிலை விஞ்ஞானி மற்றும் மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயரும் ஆவார். இவர், 58.3% முதல் 60.7% வரை வாக்குகளைப் பெற்று அதிபராக வெற்றி பெற்றுள்ளார். இது மெக்சிகோவின் ஜனநாயக வரலாற்றில் உயர்ந்த வாக்கு சதவிகிதமாகும்.
அதிபர் அணியினரின் கூட்டணி இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றிருப்பதால் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை எதிர்ப்பு இல்லாமல் நிறைவேற்ற முடியும். எதிர்க்கட்சித் தலைவர் சோக்சிடில் கல்வெஸ் 26.6% முதல் 28.6% வரை வாக்குகளைப் பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.
இந்த வெற்றிக்கு பின் தனது ஆதரவாளர்களிடம் பேசிய கிளாடியா “200 ஆண்டுகள் கடந்த பிறகு முதல் பெண் அதிபராக நான் ஆகப்போகிறேன்,” என்று தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
கிளாடியா வின் வெற்றி மெக்சிகோவுக்கு கிடைக்கும் பெரும் முன்னேற்றம் மற்றும் பாரம்பரிய மதிப்புகள் மற்றும் பெண்களுக்கான மரபு நிலைகளைக் காப்பாற்றிய நாட்டில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த வெற்றி அமெரிக்கா, மெக்சிகோ அல்லது கனடாவில் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் பெண் கிளோடியா என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…