தைவானில் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்…மக்கள் அச்சம்.!

Taiwan Earthquake: தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உள்ளனர்.
தைவானில் நேற்று (திங்கட்கிழமை) இரவு தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வரை அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
நேற்று மாலை 5.08 மணியளவில் கிழக்கு ஹுவாலியன் கவுண்டியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.3 ஆக பதிவானது. இதனால் தலைநகர் தைபேயில் சில கட்டிடங்கள் குலுங்கியதாகவும் தீவின் வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. அங்கு கடந்த ஏப்ரல் 3ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிக்கி 17 பேர் பலியாகினர். அப்போது, சேதமடைந்த ஒரு ஹோட்டல் இப்போது செயல்பாட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.
2016-ல் தெற்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதற்கு முன்னதாக, 1999-ல் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 க்கும் அதிகமானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்க்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025