Woman dries clothes on balcony 5 star resort in Dubai [file image]
துபாய்: இந்திய பெண்மணியான பல்லவி வெங்கடேஷ் தனது விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார் அங்கு அட்லாண்டிஸ், தி பால்மில் என்ற 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில், பல்லவி வெங்கடேஷ் தனது அறையின் பால்கனியில் அவரது துணிகளை காய வைத்துள்ளார். அதனை வீடியோ எடுத்து அவரது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாக பரவியுள்ளது.
அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவில், பல்லவியின் தாய் கடற்கரை ரிசார்ட்டில் உள்ள அவர்களின் அறையின் பால்கனியில் துணிகளை காயவைப்பதை நம்மால் காண முடியும். மேலும், “அம்மா பாம் அட்லாண்டிஸில் அம்மா வேலைகளை செய்கிறார்” என அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோ மிகவும் வைரலாக பரவிய நிலையில், அந்த பதிவிற்கு அந்த ஹோட்டல் கமெண்ட் செய்துள்ளது. அந்த கமெண்டில், “அம்மாவின் கடமைகளை பாராட்டுகிறோம். நீங்கள் நன்றாக உங்கள் விடுமுறையை களிக்கிறீர்கள் என நம்புகிறோம்.
ஒவ்வொரு குளியலறையிலும் உள்ளே துணியை காய வைப்பதற்கான இயந்திரத்தை நாங்கள் கொடுத்திருகிறோம். அதனால் நீங்கள் உங்கள் ஆடைகளை அங்கேயே காயவைத்து கொள்ளலாம்” என பதிவிட்டிருந்தனர்.
மேலும், பல்லவி வெளியிட்ட இந்த வீடியோவை கண்ட ஒரு சிலர் அவரை கமெண்டில் திட்டி வந்தாலும், மேலும் ஒரு சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…