அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!

அலாஸ்கா தீபகற்பத்தில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அலாஸ்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 7.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நிலநடுக்கம் 9.3 கிமீ (5.78 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலாஸ்காவின் பால்மரில் உள்ள தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெற்கு அலக்சா மற்றும் அலாஸ்கா தீபகற்ப பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Notable quake, preliminary info: M 7.4 – 106 km S of Sand Point, Alaska https://t.co/ftepDWDKb7
— USGS Earthquakes (@USGS_Quakes) July 16, 2023