6 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காத பெண்..! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா..?

ரஷ்ய நாட்டின் influencer தான் ஜன்னா டி’ஆர்ட் என்று அழைக்கப்படும் ஜன்னா சாம்சோனோவா. இவர் பட்டினி மற்றும் உடல் சோர்வால் உயிரிழந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் டயட் இருந்த நிலையில், பல வாரங்களாக பின்பற்றி பழங்களை மட்டும் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடித்து வந்துள்ளார்.
தனது சமூகவலைத்தள பக்கத்திலும், சமைக்காத சைவ உணவு முறைகள் பற்றி பதிவிட்டு அதை சாப்பிட சொல்லி வலியுறுத்தி வந்துள்ளார். 39 வயதான அவர் பலாப்பழம், துரியன், பழங்கள், விதைகள், முளைகள், பழச்சாறுகள் மற்றும் மிருதுவாக்கிகளை உட்கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளார். மேலும்,அவரது வாழ்க்கை முறையைத் தழுவிக்கொள்ளுமாறு சமூகவலைத்தளத்தில் தன்னை பின்பற்றுபவர்களை வலியுறுத்தினார்.
வெறும் பழ உணவுகளை மட்டும் எடுத்தது அவரது உடலை பலவீனமாக்கியுள்ளது.ஜன்னாவின் நெருங்கிய நண்பர் ஒருவர், ஜன்னாவின் உடல்நிலையை பார்த்து மருத்துவரை அணுக சொல்லியுள்ளார். ஆனால், அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த நிலையில், ஜன்னாவின் தாய் கூறுகையில், அவரது மோசமடைவதற்கு காலரா போன்ற நோய்த்தொற்று மற்றும் அவரது சைவ உணவு முறையால் ஏற்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு தான். சமைக்காத உணவுகளை சாப்பிட்டால், எப்போதும் இளமையாக இருக்கலாம் என ஜன்னா நம்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் 6 ஆண்டுகளாக தண்ணீர் பருகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025