பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட்..!

imrankhan

முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (இசிபி) ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை பிறப்பித்துள்ளது

தேர்தல் ஆணையத்தை அவமதித்த வழக்கில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஃபவாத் சவுத்ரிக்கு எதிராக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (இசிபி) ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளது. இம்ரான் கான் மற்றும் ஃபவாத் சவுத்ரி தனிப்பட்ட முறையில் சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் ECP முன் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக பிடிஐயின் பல தலைவர்கள் மீது அவமதிப்பு வழக்குகள் தொடங்கப்பட்டன. அவர்களுக்கு எதிராக பல நோட்டீஸ்கள் வழங்கப்பட்ட போதிலும், கட்சித் தலைவர்கள் ECP முன் ஆஜராகவில்லை.

இந்த நிலையில், ECP பல எச்சரிக்கைகளுக்கு பின், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 70 வயதான கான், கடந்த ஆண்டு ஏப்ரலில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பல்வேறு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், கடந்த மே 9-ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து பிடிஐ தலைவர் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து  அன்று நாடு முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன. கானின் ஆதரவாளர்கள் லாகூர் கார்ப்ஸ் கமாண்டர் இல்லம், மியான்வாலி விமானப்படை தளம் மற்றும் பைசலாபாத்தில் உள்ள ஐஎஸ்ஐ கட்டிடம் உட்பட ஒரு டஜன் இராணுவ தளங்களை கானின் கைதுக்கு பதிலடியாக சேதப்படுத்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்