Monkey Pox Virus [file image]
ஜெனிவா : இந்த ஆண்டில் இதுவரை பல நாடுகளில், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு குரங்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வருவதால் அனைத்து மக்களும் முன் எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
குரங்கு அம்மை (Mpox) என்பது ஒரு ஜூனோசிஸ் ஆகும், இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு நோயாகும். இது பெரும்பாலும் வெப்பமண்டல மழைக்காடுகளுக்கு அருகில் வாழும் உயிரங்களுக்குப் பரவக் கூடிய தொற்று நோயாகும். அணில், எலிகள், டார்மிஸ், பல்வேறு வகையான குரங்குகள் மற்றும் பிற விலங்குகளிலிருந்து இந்த குரங்கு அம்மை வைரஸ் தொற்றுக்கான சான்றுகள் கிடைத்துள்ளது.
கொரோனா தொற்றிருக்கு அடுத்தபடியாக கடந்த 2022 ஆண்டு முதல் பரவத் தொடங்கிய இந்த நோய் முதலில் ஆப்ரிக்க நாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது, மெல்ல மெல்ல 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கி இருக்கிறது. ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் 17,000-திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 500-கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
குரங்கு அம்மையின் ஊடுருவ எடுத்து கொள்ளும் காலம் என்பது 5 முதல் 21 நாட்கள் வரை இருக்கலாம். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகளாக காய்ச்சல், கடுமையான தலைவலி, நிணநீர் கணுக்களின் வீக்கம், முதுகுவலி, தசை வலி மற்றும் ஆற்றல் இல்லாமை உள்ளிட்ட அறிகுறிகளுடன் நோயின் காய்ச்சல் நிலை பொதுவாக 1 முதல் 3 நாட்கள் வரை நீடிக்கும்.
மேலும், இந்த காய்ச்சல் நிலை தொடர்ந்தால் தோல் வெடிப்பு 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். பருக்கள் முதல் கொப்புளங்கள் வரை உருவாகும், அதைத் தொடர்ந்து தோளில் சிரங்குகள் அல்லது மேலோடுகள் உருவாகும் எனத் தெரிவித்துள்ளனர். எனவே, இது போன்ற அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால் மருத்துவரை உடனடியாக நாடுவது மிகவும் நல்லது.
குரங்கு அம்மை நோய்க்கான சிகிச்சையானது அறிகுறிகளைப் பொறுத்தே அளிக்கப்பட்டு வருகிறது. குரங்கு அம்மைக்கு எதிராக செயல்படக்கூடியப் பல்வேறு சிகிச்சை முறைகள் உருவாக்கப்பட்டுச் சோதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அசுத்தமான பொருட்களை நெருங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும், கையுறைகள், பாதுகாப்பு ஆடைகள், உபகரணங்கள் என அவர்களை கவனிக்கும் சக உறவினர்கள் அணிந்திருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ‘குரங்கம்மை காய்ச்சல் பொது சுகாதார அவசரகால நிலை சூழலாக உருவாகி உள்ளது. இந்த தொற்று நோய்க்கு 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதனால், மேற்கொண்டுப் பரவவிடாமல் நிறுத்துவதற்கு சர்வதேச உதவி வேண்டும்’ என அந்த அறிக்கையில் கேட்டு கொண்டுள்ளது.
மேலும், ஆப்ரிக்காவில் இந்த நோய் தொற்றை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த ஆண்டு மிகத் தீவிரமாகி இருப்பது தெரியவந்துள்ளது. இந்தாண்டு 160% இந்த நோய் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டில் இந்த நோய் பரவத் தொடங்கிய போது, நம் அண்டை மாநிலமான கேரளாவில் 3 பேருக்கு இந்த குரங்கு அம்மை நோய் உறுதிச் செய்யப்பட்டது. மேலும், சமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதிச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தாண்டி வேறு எங்கும் குரங்கு அம்மை நோய் பாதித்தாக பதிவாகாவில்லை.
இது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, “குரங்கு அம்மை நோய் தொற்று தொடர்பாக அவசரநிலை கமிட்டி என்னைச் சந்தித்து பேசி உலக சுகாதார நிலைக் குறித்த சில அறிவுரைகளை வழங்கினார்கள். அதனை நான் முழுமையாக ஏற்றுக் கொடுள்ளேன்.
உலக அளவில் பொது சுகாதாரத்தின் நிலை மிகவும் அபாயகரமாக உள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் தன்னாட்சி சுகாதார நிறுவனம் நேற்று அவசர நிலையை அறிவித்துள்ளது. இந்த நோய் தொற்றில் மக்களை பாதுகாக்க உலக சுகாதார மையம் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் இணைந்து செயல்பட இருக்கிறது”, என கூறி உள்ளார்.
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…
சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே…
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…