இஸ்ரேல் – ஹிஸ்புல்லா தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும் பைடன்! போர்நிறுத்த ஒப்பந்த விவரங்கள் இதோ…

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

US President - Israel Hezbolla war

வாஷிங்டன் : கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் – ஹமாஸ் போர் காசாவில் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை முழுதாக அழிக்கும் வரையில் போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி தற்போது வரை முழுதாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

அதேபோல, இஸ்ரேல் ராணுவத்திற்கும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான தாக்குதலும் தொடர்ந்து வருகிறது. இந்த தாக்குதல் தொடங்கியதில் இருந்து குறைந்தது 3,700 லெபனான் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போரை நிறுத்த தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முயற்சி மேற்கொண்டுள்ளார். அதற்கு இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசுகள் ஒப்புக்கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த போர் நிறுத்தம் குறித்து ஜோ பைடன் நேற்று கூறுகையில்,  ” கடந்த 14 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த தாக்குதலால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடக்கும் இந்த தாக்குதலுக்கு இது ஒரு நிரந்தர தீர்வாக அமையும் வகையில் இந்த போர் நிறுத்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பிலும் உள்ள பொதுமக்களும் விரைவில் பாதுகாப்பான ஒரு சூழலுக்கு திரும்ப முடியும். அவர்களின் வீடுகள், பள்ளிகள், பண்ணைகள், வணிகங்கள் உள்ளடங்கிய அவர்களின் வாழ்க்கையை மீண்டும் தொடங்குவார்கள்.” என பைடன் தெரிவித்தார்.

லெபனான் பாராளுமன்ற சபாநாயகர் கூறுகையில், போர்நிறுத்தம் தொடர்பான நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஹிஸ்புல்லா அமைப்பு இன்னும் முறையாக கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். இருந்தும் , லெபனானின் தற்காலிகப் பிரதமர் நஜிப் மிகடி ” லெபனான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை தாம் வரவேற்பதாக பைடனிடம் தெரிவித்ததாக கூறினார்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அடுத்த 60 நாட்களில் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் தனது படைகளை படிப்படியாக திரும்பப் பெறுகிறது. மேலும், லெபனான் இராணுவம் மற்றும் மாநில பாதுகாப்புப் படைகள் ஏற்கனவே பொறுப்பில் இருந்த அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ பைடன், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இணைந்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். அதில், இரு நாடுகளும் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர் நிறுத்தத்தை முழுமையாக செயல்படுத்த இஸ்ரேல் மற்றும் லெபனானுடன் இணைந்து செயல்படுவோம் என்று பதிவிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்