”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

கல்வி விருது விழாவின் முடிவில், 'நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்யபோகிறேன் என்று தெரியவில்லை' என்று தவெக தலைவர் விஜய் உருக்கமாக பேசியிருக்கிறார்.

VIJAY Honors Students

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் வகையில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழா நான்கு கட்டங்களாக நடைபெற்று இன்று நிறைவடைந்தது.

மாணவர்களின் கல்வி சாதனைகளை பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டது. தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

முதல் கட்டமாக (மே 30) அன்று மாமல்லபுரத்தில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக ( ஜூன் 4) அன்று திருச்சி, ஈரோடு, கரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த 75 தொகுதி மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மூன்றாம் கட்டமாக (ஜூன் 13) அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

நான்காம் கட்டமாக இன்று இன்றைய விழாவில் JEE தேர்வில் சிறப்பாக வெற்றி பெற்று சாதனை படைத்த சேலம் மாவட்டம் கருமந்துறையை சேர்ந்த மாணவி ராஜேஸ்வரியை கௌரவித்து 2 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையை அக்கட்சியின் தலைவர் விஜய் வழங்கினார். மேலும், ‘விஞ்ஞானி ஆகவேண்டும் என்ற மாணவி ராஜேஸ்வரி கனவு நிறைவேறும்’ என்றும் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடிவில் மேடையில் நின்றவாறு செல்ஃபி எடுத்துக்கொண்டார்தவெக தலைவர் விஜய். மேலும், இறுதி உரையாக மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய், ”4 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதற்கு முக்கிய ஹீரோஸ், ‘மாவட்ட நிர்வாகிகள் தான்’, நீங்கள் இல்லை என்றால் இந்த நிகழ்ச்சி நடத்திருக்காது.

மாணவர்களின் வீட்டுக்குச் சென்று, மரியாதையாக அழைத்து, பாதுகாப்புடன் அழைத்து வந்து கொண்டு சென்று விடும் உங்களைப் பற்றி பெற்றோர்கள் கூறியது பெருமையாக இருக்கிறது.  நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்யபோகிறேன் என்று தெரியவில்லை” என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்