Pakisthan Jorunalist Hitten by Bulls [file image]
பாகிஸ்தான் : பாகிஸ்தானில் உள்ள ஒரு இடம் தெரியாத இடத்தில், மாட்டு சந்தையில் ஒரு பாகிஸ்தான் பெண் செய்தியாளர் வியாபாரிகளுடன் கலந்து ஒரு நிகழ்ச்சியில் மாடுகளின் விலைகளை குறித்தும் அதன் வியாபாரத்தை குறித்தும் கலந்துரையாடுவது போல அந்த நிகழ்ச்சி அமைந்திருக்கும்.
அப்படி பேசி கொண்டிருக்கையில் அங்கிருந்த ஒரு காளை மாடு அந்த பெண் செய்தியாளரை முட்டி தூக்கி எறிந்து விடும். இது சம்மந்தமான வீடியோ காட்சியும் அந்த நிகழ்ச்சி பதிவு செய்யும் கேமராவில் பதிவாகி இருக்கும். அந்த வீடியோவில், ‘பெண் செய்தியாளர் ஒரு கன்று குட்டியின் முன்பு நின்று, இங்குள்ள வியாபாரிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை.
அவர்கள் 5 லட்சத்துக்கும் குறைவான தொகையை ஏற்க மாட்டார்கள்’ என அந்த வீடியோவில் அவர் பேசி கொண்டிருப்பார். அப்போது எங்கிருந்தோ வந்த இரு காளை மாடுகள் அந்த பெண்ணை முட்டி தள்ளிவிடும். அந்த பெண்ணும் அலறி அடித்து கீழே விழுவார். அதன்பின் உடனடியாக அங்கிருந்த வியாபாரிகள் அந்த காளை மாடுகளை அங்கிருந்து இழுத்து செல்வார்கள். அத்துடன் அந்த வீடியோவும் முடிவடைந்து இருக்கும்’.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. மேலும், இந்த வீடியோ X இல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோவானது 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. சிலர் இந்த காட்சியை நகைச்சுவையாகக் கண்டாலும், ஒரு சிலர் அதனை கண்டித்து அவர்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…