AI சாட்போட்டை அறிமுகம் செய்த சீன நிறுவனம்! கடும் இழப்பை சந்தித்த அமெரிக்கா!
சீன நிறுவனம் DeepSeek அதன் புதிய AI சாட்போட்டை வெளியிட்ட பிறகு, அமெரிக்க தொழில்நுட்ப பங்குகளில் (சுமார் ரூ.83 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டது.

சீனா : இன்றயை காலத்தில் AI நுண்ணறிவு வளர்ச்சி என்பது எந்த அளவுக்கு இருக்கிறது என சொல்லியே தெரியவேண்டாம். பலரும் OpenAI, Google மற்றும் Meta, உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தங்களுடைய வேலைகளை சுலபமாக செய்துகொண்டு வருகிறார்கள். இதனுடைய பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. ஏஐ (AI) துறையில் அமெரிக்க நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், சாட்ஜிபிடி, ஜெமினி என்று அமெரிக்க நிறுவனங்கள் தான் தங்களுடைய கை வசத்தில் வைத்திருக்கிறது.
எனவே, அவர்களை முறியடித்து அவர்களை விட நல்ல AI அம்சங்களை உள்ளடக்கிய விஷயத்தை கொண்டுவரவேண்டும் என திட்டமிட்டு சீனா நிறுவனமான டீப்சீக் சமீபத்தில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாட்போட், OpenAI மற்றும் அதன் ChatGPT போன்ற அமெரிக்க மாடல்களுடன் போட்டியிடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சரிந்த பங்குகள்..
இந்த சாட்போட் குறைந்த பணம் செலுத்தி ChatGPT போன்றவற்றில் இருக்கும் பயன்பாடுகளை பயன்படுத்தும் வசதிகளை வழங்குகிறது. இதன் மூலம், அமெரிக்க AI தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது நம்பிக்கையை உலுக்கியுள்ளது. இதன் விளைவாக, அமெரிக்க பங்குகள் அதிகமாக வீழ்ந்துள்ளன, குறிப்பாக envidia மற்றும் Apple போன்ற முன்னணி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, சீன நிறுவனம் DeepSeek தனது புதிய செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டை அறிமுகப்படுத்திய பிறகு, அமெரிக்க தொழில்நுட்ப பங்குகளில் $1 டிரில்லியன் (இந்திய மதிப்பின் படி சுமார் ரூ.83 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டது. அதைப்போல, என்வி டியா (Envidia) நிறுவனத்தின் பங்குகள் 17% வீழ்ந்ததால், அதன் சந்தை மதிப்பில் $600 பில்லியன் (சுமார் ரூ.49.8 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டது. அதே சமயம், கூகுள் $100 பில்லியன் (சுமார் ரூ.8,300 கோடி) மற்றும் மைக்ரோசாப்ட் $7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.58,100 கோடி) இழந்தன.
அதே சமயம், டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 289.33 புள்ளிகள் 0.65% அதிகரித்து 44,713.58 ஆக முடிந்தது. S&P 500 88.96 புள்ளிகள் 1.46% குறைந்து 6,012.28 ஆக முடிந்தது. நாஸ்டாக் காம்போசிட் 612.47 புள்ளிகள் 3.07% குறைந்து 19,341.83 ஆக முடிந்தது.
ட்ரம்ப் சொன்னது என்ன?
அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததை தொடர்ந்து திங்கள் கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிபர் டோனால்ட் டிரம்ப் ” சீனாவின் AI வளர்ச்சி மற்றும் குறைந்த விலையிலான மாடல்கள், உலகின் பல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு புதிய சவாலாக இருக்கிறது. நான் சீனாவைப் பற்றி படித்து வருகிறேன், அங்குள்ள சில நிறுவனங்கள் வேகமான, குறைந்த விலையுள்ள AI முறைகளைக் கொண்டு வருகின்றன, அது நல்லது.
ஆனால், அதே நேரம், அவர் சீனாவையும், அமெரிக்காவையும் ஒப்பிடும் போது, அமெரிக்கா எப்போதும் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு துறையில் முன்னணி யில் உள்ளது சீனா முன்னிலை வகிக்கிறதா? சீனத் தலைவர்கள், மலிவான தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முன்னிலையில் உள்ளனர். ஆனால், அமெரிக்காவின் அறிவியலாளர்கள் அதனை விட சிறப்பாக உருவாக்குவதில் முன்னணியில் உள்ளனர் . அவர்கள் மூலமாக பலமான தொழில்நுட்பங்களை உருவாக்க முடியும். அமெரிக்கா எப்போதும் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பில் முன்னணியில் இருக்கும்” எனவும் டோனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.