இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் மார்க் ஸுகர்பர்க், ஜெஃப் பெசால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று உலக பணக்காரர்களின் பட்டியலை 39வது ஆண்டாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ், டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் 342 பில்லியன் அமெரிக்க டாலருடன் முதலிடத்தில் உள்ளார்.
இவரது சொத்துமதிப்பு கடந்தாண்டுடன் ஒப்பீடு செய்கையில் 75% அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் டிரம்ப் அந்நாட்டு அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிறகு மஸ்கின் டெஸ்லா (Tesla), ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) மற்றும் எக்ஸ்ஏஐ (xAI) ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்வால் மஸ்கின் சொத்து மதிப்பு உயர்வு ஏற்பட்டது. டெஸ்லா நிறுவனத்தில் எலான் மஸ்க்கிற்கு சுமார் 12% பங்குகள் உள்ளன. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் 42% பங்கு உள்ளது.
அடுத்த இடத்தில பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் 216 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உடன் 2ஆம் இடத்தில் உள்ளார். 3ஆம் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 215 பில்லியன் அமெரிக்க டாலர் உடன் உள்ளார். 4வது இடத்தில் ஆரக்கிள் நிறுவனத் தலைவர் லாரி எலிசன் 192 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உடன் உள்ளார். 5வது இடத்தில் ல் LVMH நிறுவனத் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் 178 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உடன் உள்ளார்.
முதல் 10 இடங்களை பிடித்த உலக பணக்காரர்கள் லிஸ்டில் அமெரிக்கர்கள் 8 பேரும், பிரான்ஸ் நாட்டினர் 1 நபரும், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு நபரும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக நாட்டை ஒப்பீடு செய்து பார்க்கையில் இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. லிஸ்டில் உள்ள இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்துமதிப்பு 205 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
இந்த லிஸ்டில் டாப் 20-ல் இடம் பிடித்த ஒரே பணக்காரர் முகேஷ் அம்பானி (18வது இடம்) தான். இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராகத் திகழும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 90.2 பில்லியன் டாலராக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025