முக்கியச் செய்திகள்

ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்: 100 பேர் உயிரிழப்பு.. 900 பேர் காயம்..!

Published by
murugan

ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 100 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் காசா மீது இஸ்ரேல் முற்றுகையைத் தொடங்கியது. காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வருகிறது. கடந்த 16 ஆண்டுகளில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் , இஸ்ரேலுக்கும் இடையே பல போர்கள் நடந்துள்ளன. இந்தநிலையில்,  இன்று காசா பகுதி வழியாக பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் 5000 ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர்.

இதுவரை நடந்த மிகக் கொடூரமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த திடீர் தாக்குதல் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இஸ்ரேல் போர்க்கால நிலையை அறிவித்துள்ளது.  இந்த ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 100 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய நகரங்களுக்குள் நுழைந்து பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.  இந்த ஆண்டு இதுவரை ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் , இஸ்ரேலுக்கும் இடையே நடந்த மோதலில் இரு தரப்பிலிருந்தும்  270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில்  247 பாலஸ்தீனியர்கள், 32 இஸ்ரேலியர்கள் மற்றும் இரண்டு வெளிநாட்டினர் உயிரிழந்துள்ளனர்.

Published by
murugan

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

9 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

10 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

11 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

11 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

12 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

13 hours ago