பிரேசில் நாட்டை சேர்ந்த, போதை கும்பலின் தலைவன் கிளாவினா டா சில்வா. இவர் போதை பொருள் விற்பதை தனது தொழிலாக கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் போதை பொருளை வாங்குமாறு கடற்கரை ஓர கிராம மக்களை மிரட்டியும், மூளை சலவை செய்தும் விற்பனை செய்து வந்துள்ளார்.
சில்வா மீது பல குற்றங்கள் இருந்து வந்த நிலையில், பிரேசில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர் சிறையில் இருந்து எப்பிடியாவது தப்பிச் செல்ல வேண்டும் என எண்ணி, அவரை பார்க்க வரும் அவரது மகளை போல வேடமணிந்து, அதற்கான செயல்பாடுகளில் இறங்கியுள்ளார்.
இவர் தன்னிடம் இருந்த செல்வாக்கின் மூலம், பெண்ணை போல வேடமணிவதற்கான அனைத்து மேக்கப் பொருட்களையும் சிறைக்குள் வரவழைத்த நிலையில், அவரது மகள் அவரை பார்க்க வந்த நாளன்று, அவரது இந்த திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.
பெண்ணை போல வேடமணிந்து சிறையில் இருந்து வெளியே வந்த சில்வா மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக அவரை விசாரித்த போது, சில்வா கையும், களவுமாக பிடிபட்டார். சில்வாவை போலீசார் வேடத்தை கலைக்க சொல்லியுள்ளனர்.
இதனையடுத்து, இவர் பெண் வேடம் அணிவதற்கான இந்த மேக்கப் பொருட்கள் எவ்வாறு வந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இவரது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…