இங்கிலாந்தில்,நிக் ஜேம்ஸ் என்பவர் ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்து வாங்கிய போது அதில் ஆப்பிள் ஐபோன் இருப்பதைக்கண்டு ஆச்சரியம் அடைந்தார்.
இங்கிலாந்தில் வசிக்கும் 50 வயதான நிக் ஜேம்ஸ் என்பவர்,ஆன்லைன் மூலம் சூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்துள்ளார்.ஆனால்,டெலிவரி வந்த பார்சலில் ஆப்பிள் பழங்களுடன் ஐபோன் ஒன்று இருந்துள்ளதைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தார்.
இதுகுறித்து,நிக் ஜேம்ஸ் ட்விட்டரில் தெரிவித்தது, “நாங்கள்,புதன்கிழமையன்று ஆன்லைன் மூலம் ஆப்பிள் பழங்கள் ஆர்டர் செய்தோம்.அப்போது,எங்களுக்கு ஒரு சிறிய ஆச்சரியம் காத்திருந்தது.அது என்னவென்றால் டெலிவரி வந்த பார்சலில் பழங்களுடன் ஆப்பிள் ஐபோன் ஒன்று இருந்தது,இதனால்,எனது மகனுடைய மகிழ்ச்சியான வாரமாக இந்த வாரம் இருக்கும்” என்று கூறி, ஐபோன் வழங்கியதற்காக டெஸ்கோவிற்கு நன்றி தெரிவித்தார்.
டெஸ்கோவானது,உலகில் உள்ள மூன்றாவது பெரிய மளிகை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற இதர பொட்களை விற்பனை செய்யும் நிறுவனமாகும்.டெஸ்கோ நிறுவனம்,அதன் ஆன்லைன் கடை உரிமையாளர்களுக்காக இந்த வித்தியாமான விளம்பரப்படுத்துதலை மக்களிடம் நடத்தி வருகிறது.ஆகவேதான்,நிக்கிற்கு ஆப்பிள் பழங்களுடன் ஆப்பிள் ஐபோனை அனுப்பியுள்ளது.
மேலும், இங்கிலாந்தில் உள்ள பல விற்பனை நிலையங்களில் 80க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விளம்பரத்திற்காக டெஸ்கோவால் இலவசமாக வழங்கப்படுகின்றன.
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…