Categories: உலகம்

மாஸ்கோவில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல் – 60 பேர் உயிரிழப்பு!

Published by
கெளதம்

Moscow Terror Attack: ரஷ்யாவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யா நாட்டின் தலைநகரமான மாஸ்கோவில் மேற்கு விளிம்பில் அமைந்துள்ள இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கமான குரோகஸ் சிட்டி ஹாலில் திடீரென புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 60 பேர் உயிரிழந்த நிலையில், 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்பொழுது, இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. ராணுவ உடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் உடலில் துப்பாக்கி ஏந்தியபடியும்  வெடி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிது. இதனால், தாக்குதல் நடத்தப்பட்ட முழு அரங்கமும் தீப்பற்றி எரிந்து நாசமடைந்துள்ளது. அரங்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான  காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பின்னனர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததோடு, அரங்கத்திற்குள் சிக்கியவர்களையும் பத்திரமாக மீட்டனர். மேலும், படுகாயமடைந்த நபர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு பெஸ்லான் பள்ளி ஐஜாக் செய்த சம்பவத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிழந்தனர். இதற்கு பிறகு, ரஷ்யாவில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும். ரஷ்யாவில் புதின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழலில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

15 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

16 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

17 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

18 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

19 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

20 hours ago