காசா எல்லை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு..!

தொடர்ந்து மூன்று நாட்களாக இஸ்ரேல் – ஹமாஸ் மாறிமாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு தரப்பிலும் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளே அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், பிற நாடுகளின் ராணுவ உதவிகள் எங்களுக்கு தேவையில்லை என்றும், இந்த போரை நாங்களே பார்த்துக்கொள்வோம் என இஸ்ரேல் தூதர் அறிவித்துள்ளார். அங்கு நொடிக்கு நொடி பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில், காசா எல்லை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசா எல்லை முழுவதும் இஸ்ரேல் ராணுவ படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து காசாவிற்கு மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றின் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.
போர் காரணமாக காசா பகுதியிலிருந்து 1.2 லட்சம் மக்கள் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை இந்த போரில் ஜாபாலியா என்ற முகாமில் இருந்த ஏராளமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், காசாவிற்கு எரிபொருள், உணவு எடுத்துச் செல்ல அனுமதியில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025