சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!

தலைநகர் டமாஸ்கஸில் உள்ள சிரிய ஆட்சியின் இராணுவத் தலைமையகத்தின் நுழைவாயிலைத் தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) அறிவித்துள்ளது.

Syria

டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹெஸ்பொல்லாவுக்கு எதிரான போருக்கு மத்தியில், இஸ்ரேலிய இராணுவம் சிரியா மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

அதன்படி, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள HTS தலைமையிலான சிரிய இராணுவத்தின் தலைமையகம் மற்றும் சிரிய பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளது.


இஸ்ரேலிய பாதுகாப்பு படை (IDF) எக்ஸ் பக்கத்தில், ஒரு பதிவில் சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் உள்ள சிரிய ஆட்சியின் இராணுவ தலைமையகத்தின் நுழைவு வாயிலைத் தாக்கியதாகக் கூறியது. தெற்கு சிரியாவில் ட்ரூஸ் குடிமக்களுக்கு எதிரான ஆட்சியின் முன்னேற்றங்களையும் நடவடிக்கையையும் தற்போது கண்காணித்து வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தெற்கு சிரியாவில் ட்ரூஸ் ஆதிக்கம் செலுத்தும் நகரமான ஸ்வீடாவில் நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில் நடந்துள்ளன, அங்கு அரசாங்கப் படைகளுக்கும் உள்ளூர் ட்ரூஸ் பிரிவுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் முறிந்துள்ளது. ட்ரூஸ் சமூகத்தைப் பாதுகாப்பதற்காகவே இந்த தாக்குதல்கள் என்று இஸ்ரேல் கூறுகிறது.

தற்போது, சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்திய நிலையில், சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம் நெதன்யாகு எச்சரிக்க விடுத்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்