US VisitPMModi [ImageSource- Twitter/@PMO India]
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், இந்தோ-பசிபிக் உறுதிப் பாட்டை மேலும் வலுப்படுத்தும் என வெள்ளை மாளிகை அறிக்கை.
பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஜூன் மாதம் 22ஆம் தேதி அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு மேற்கொள்ளும் இந்த அதிகாரப்பூர்வ அரசு முறை பயணம் வரலாற்று சிறப்புமிக்கது என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் அரசு விருந்தும் இருக்கும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த பயணத்தின் மூலம் இருதரப்பு உறவுகளுக்கு குறிப்பிடத்தக்க புதிய உத்வேகம் ஏற்படும் என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தார். மேலும் மோடியின் அமெரிக்க பயணம் இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகத்திற்கும் வருங்கால முன்னேற்றத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று சந்து கூறினார்.
இது தவிர ஜனாதிபதி பைடனும், பிரதமர் மோடியும் சில வாரங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் குவாட்(Quad) லீடர்ஸ் மாநாட்டிலும், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டிலும் சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…