Narges Mohammadi [Imaage source : The Nobal Price ]
குறிப்பிட்ட ஒவ்வொரு துறையிலும் உலக அளவில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு அளிக்கப்படும் நோபல் பரிசானது இந்தாண்டும் கடந்த திங்கள் கிழமை (அக். 2) முதல் அறிவிக்கப்ட்டு வருகிறது. திங்களன்று மருத்துவத்துறை சார்பில் ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ட்ரே வீஸ்மேன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அடுத்து செவ்வாயன்று இயற்பியல் துறையில் ஆராய்ச்சியாளர்களான ஆஸ்பெக்ட், ஜான் எஃப். கிளாசர் மற்றும் அன்டன் ஜீலிங்கர் ஆகிய 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கபட்டது. புதன் அன்று வேதியியல் துறையில் சிறந்து விளங்கிய ஆராய்ச்சியாளர்கள் மௌங்கி பவெண்டி, லூயிஸ் ப்ரூஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று வியாழன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு நோர்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காகவும் நர்கேஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நர்கேஸ் முகமதி, ஈரானில் பிறந்து வளர்ந்தவர். இயற்பியல் துறையில் பட்டம் வென்ற அவர், கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே சமூக செயல்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வந்துள்ளார். ஈரானில் பெண்களின் உரிமைகளுக்காகவும், மனித வளம் மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் கடந்த 2011ஆம் ஆண்டு முதன் முதலாக ஈரான் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு விடுவிக்கப்பட்ட அவர் 2015இல் மீண்டும் கைது செய்யப்பட்டார். மரண தண்டனைக்கு எதிராகவும் தனது குரலை அழுத்தமாக பதிவு செய்தவர் நர்கேஸ் முகமதி.
பெண்களின் உரிமைக்காகவும், மனித வள மேம்பாட்டிற்காகவும் இதுவரை 13 முறை கைது செய்யப்பட்டு 5 முறை குற்றவாளி என ஈரானிய அரசால் தீர்ப்பளிக்கப்பட்டு 31 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அமைதிக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வரும் அக்டோபர் 9ஆம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…