பள்ளி பேருந்து மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு..! 8 வயது சிறுமி பலி, மேலும் 5 பேர் காயம்..!

PoliceOfficerFireSchoolBus

பாகிஸ்தான் பள்ளிப் பேருந்து மீது போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 வயது சிறுமி உயிரிழப்பு.

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. ஸ்வாட் பள்ளத்தாக்கு பாகிஸ்தான் தலிபான்களின் கோட்டையாக இருந்து வந்தது.

இதனால், தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக ஆலம் கான் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து பள்ளியை விட்டு வெளியேறும்போது ஆலன் துப்பாக்கியால் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் பேருந்தில் இருந்த 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 8 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்பின், ஆலம் கான் உடனடியாக கைது செய்யப்பட்டு, இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்