நாளை தேசிய தின விழாவில் கலந்து கொள்ள, பிரதமர் மோடி, பிரான்ஸ்க்கு பயணம்.!

பிரான்ஸ்க்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்பட்டு சென்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அழைப்பின் பேரில், ஜூலை 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்கள் பயணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். இதற்கு முன்னதாக பேசிய பிரதமர் மோடி, 140 கோடி இந்திய மக்களின் சார்பாக பிரான்சுக்கு எனது தேசிய தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாளை ஜூலை 14 ஆம் தேதி பிரான்ஸ் அதன் தேசிய தினத்தைக் கொண்டாட உள்ள நிலையில், பிரதமருக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் பிரதமர் மோடி இன்று விமானத்தில் புறப்பட்டார். அங்கு அவர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன், இரு நாடுகளின் உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.
Prime Minister Narendra Modi, in an interview with French newspaper Les Echos, says, “I see India being that strong shoulder that if Global South has to make that high jump, India can be that shoulder to propel it ahead. For the Global South, India can also build its linkages… pic.twitter.com/uvDlXZfLlB
— ANI (@ANI) July 13, 2023
மேலும் பிரான்ஸ் தேசிய தினமான பாஸ்டில் தின அணிவகுப்பின் ஒரு பகுதியாக இந்திய முப்படை வீரர்களும், இந்திய விமானப்படை விமானமும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.