Categories: உலகம்

உக்ரைன் நகரத்தை நோக்கி முன்னேறும் ரஷ்ய படைகள்.. மீண்டும் தீவிரமடையும் போர்!

Published by
பாலா கலியமூர்த்தி

ரஷ்யப் படைகள் உக்ரேனிய நகரத்தை நோக்கி எல்லாப் பக்கங்களிலிருந்தும் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான யுத்தம் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய நிலையில்,  இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான தாக்குதலில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து வந்த தாக்குதல் சற்று குறைந்துள்ள நிலையில், அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரே இரவில் உக்ரனின் கிய்வ் நகரம் மீது 70-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிப்பு.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பு.!

இது தான் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைனில் ஏவப்பட்ட 75 ஆளில்லா விமானங்களில் 71 சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்று அவ்வப்போது, உக்ரனின் நகரம் மீது ரஷ்ய படைகள் மீண்டும் படையெடுக்க தொடங்கியுள்ளது. இதில், தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ரஷ்யப் படைகள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் உக்ரேனிய நகரத்தை நோக்கி முன்னேறி வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யப் படைகள் கிழக்கு உக்ரேனிய நகரமான அவ்திவ்காவைக் கைப்பற்றுவதற்கான முயற்சியை தீவிரப்படுத்தி வருகின்றன. பல வாரகால தாக்குதலுக்கு பிறகு அனைத்துப் பக்கங்களிலும் முன்னேற முயற்சிப்பதாக அந்நகரத்தின் உயர் அதிகாரி கூறியுள்ளார்.

ரஷ்ய துருப்புக்கள், 21 மாத யுத்தத்தில் கிழக்கு உக்ரைனின் டோன்பாஸ் பகுதிக்கு சென்றது,  அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து அவ்திவ்கா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால், மீண்டும் ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதல்களின் தீவிரம் அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

7 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

7 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

9 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

9 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

10 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

12 hours ago