1 மில்லியன் பீப்பாய்கள் குறைக்க சவுதி அரேபியா முடிவு… உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.!

ஜூலை முதல் எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி முடிவு செய்துள்ளதை அடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
உலகின் முன்னணி பெட்ரோலிய ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா ஜூலை முதல் ஒரு நாளைக்கு மேலும் 1 மில்லியன் பீப்பாய்கள்(பேரல்கள்) எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாக உறுதியளித்ததை அடுத்து ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு $2க்கு மேல் உயர்ந்துள்ளது.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் (OPEC) உறுப்பினர்களால், கடந்த இரண்டு முறையும் உற்பத்திக் குறைக்கப்பட்டபோது விலையை உயர்த்தத் தவறியதால், தற்போது விலை வீழ்ச்சியை தடுப்பதற்கு உற்பத்தியைக் குறைப்பதாக சவுதி அரேபியா கூறியது.
சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி கடந்த மே மாதத்தில் சுமார் 10 மில்லியன் பீப்பாய்களாக(ஒரு நாளில்) இருந்ததில் இருந்து ஜூலை மாதம், ஒரு நாளைக்கு 9 மில்லியன் பீப்பாய்களாக குறையும் என்று கூறப்படுகிறது. இது இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய உற்பத்தி குறைப்பு என்று அதன் எரிசக்தி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025