கடவுளுக்கு நன்றி, நான் நன்றாக உணர்கிறேன்..! இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

நான் நன்றாக உணர்வதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெப்ப அலையினால் ஏற்பட்ட நீரிழப்புக் காரணமாக அவரது தனிப்பட்ட இல்லத்திற்கு அருகிலுள்ள டெல் ஹாஷோமரில் உள்ள ஷெபா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு முழுவதும் மருத்துவர்கள் அவரை கண்காணித்து வந்துள்ளனர்.
பின், அவர் நலமாக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நெதன்யாகு ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டார். அதில், 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தலையில் தொப்பி மற்றும் தண்ணீர் எதுவும் இல்லாமல் இருந்ததாக கூறினார்.
மேலும், கடவுளுக்கு நன்றி, நான் மிகவும் நன்றாக உணருகிறேன் என்று கூறியதோடு மருத்துவக் குழு மற்றும் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மக்கள் தண்ணீர் குடிக்கவும், கோடை வெப்பத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.