இந்த அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு..! அமெரிக்காவில் அரிசி வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்…!

white rice

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை இந்திய அரசு தடை செய்ததை தொடர்ந்து, அமெரிக்காவில் அரிசி வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்.

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை இந்திய அரசு தடை செய்ததை தொடர்ந்து, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தியாவின் அறிவிப்பை தொடர்ந்து ‘Panic Buying’ என கூறப்படும் வகையில், அமெரிக்காவின் பல்வேறு சூப்பர் மார்கெட்களில் நீண்ட வரிசையில் நின்று, பல மாதங்களுக்கு தேவைப்படும் அரிசியை, மூட்டை மூட்டைகளாக மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

இதனை கட்டுப்படுத்த, ஒரு நபருக்கு ஒரு மூட்டை அரிசி மட்டுமே வழங்கப்படும் என்ற விதிமுறையை பல்வேறு சூப்பர் மார்கெட்டுகள் கொண்டுவந்துள்ளன. பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை இந்திய அரசு தடை செய்ததை தொடர்ந்து சூப்பர் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்