எஸ்.ஜி.சூர்யா வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை!

பாஜக பிரமுகர் எஸ்.ஜி. சூர்யா வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஹைகோர்ட் தடை.

SG Suriyah BJP

பாஜக பிரமுகர் எஸ்.ஜி. சூர்யா வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஹைகோர்ட் தடை.

பாஜக பிரமுகர் எஸ்.ஜி.சூர்யா வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிதம்பரம் காவல் நிலைய காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர் தாக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் கோயில் தீட்சிதர் தாக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டதாக எஸ்.ஜி.சூர்யா மீது வழக்கு தொடுக்கப்பட்டது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் விசாரணைக்கு தடை கோரியும் எஸ்.ஜி. சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார்.

அரசியல் பழிவாங்கும் நோக்கியிலும் கருத்து சுதந்திரத்தை முடக்கும் வகையிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், பாஜக பிரமுகர் எஸ்.ஜி. சூர்யா வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஹைகோர்ட் தடை விதிக்கப்பட்டுள்ளது.