காணாமல் போன நீர்மூழ்கி..! கண்டிபிடிக்க 20,000 அடி நீருக்கடியில் செல்லக்கூடிய பிரஞ்சு ரோபோ..!

Victor 6000

காணாமல் போன நீர்மூழ்கியை கண்டுபிடிக்க, 20,000 அடி நீருக்கடியில் செல்லக்கூடிய பிரஞ்சு ரோபோ பயன்படுத்தப்படுகிறது.

கடலுக்கடியில் மூழ்கிய உலகின் மிகப்பெரிய கப்பல் எனக்கருதப்படும் டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க, அமெரிக்காவின் ஓசன்கேட் நிறுவனம் ஏற்பாடு செய்த பயணத்தில், டைட்டன் என்ற நீர்மூழ்கிக்கப்பலில் சென்ற 5 பிரிட்டிஷ் நாட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.

தற்பொழுது, காணாமல் போன டைட்டனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நீருக்கடியில் 20,000 அடி வரை செல்லக்கூடிய பிரெஞ்சு ரோபோ ஒன்று ஈடுபட்டுள்ளது. விக்டர் 6000 என்று அழைக்கப்படும் ஆளில்லா ரோபோ ரிமோட் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த விக்டர் 6000 ரோபோ, கேபிள்களை வெட்டுவதற்கு அல்லது கடலுக்கு அடியில் சிக்கிய கப்பலை மீட்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால், காணாமல் போன டைட்டன் எனப்படும் 10 டன் நீர்மூழ்கிக் கப்பலை மேற்பரப்புக்கு உயர்த்துவது என்பது இயலாது.

எனவே, 10 டன் நீர்மூழ்கிக் கப்பலை மேற்பரப்புக்கு உயர்த்தும் திறன் கொண்ட கப்பலுடன், இணைப்பதற்கு இந்த ரோபோ உதவக்கூடும். மேலும், டைட்டன் நீர்மூழ்கிக்கப்பலின் ஆக்சிஜன் இன்று மட்டுமே இருக்கும் என்பதால் தேடுதல் பணி மிகத்தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies