Man jumps off bridge [Image Source :file image]
சீனாவை சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் பெங் கிங்ளினின் வழக்கம் போல் உணவை டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்கின் தைரியமான செயல்கள் கியான்டாங் ஆற்றில் போராடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றி 9 லட்சம் பரிசு பெற்றுள்ளார்.
உணவுக்கு டெலிவரி செய்வதற்காக தன்னுடைய மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த போது, கியான்டாங் சாலையின் அருகே அந்தப் பெண் ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்ததை கவனத்தினார். பிறகு சிறுத்தும் தயக்கமின்றி, அந்த பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் 12 மீட்டர் உயரமுள்ள பாலத்தின் மீது ஏறி தண்ணீரில் குதித்து அந்த பெண்ணை காப்பாற்றினார்.
அவர் தண்ணீரில் குடித்த சில நிமிடங்களில், போலீசார் மற்றும் லைஃப் படகுகள் வந்து, வெற்றிகரமாக பெண்ணை மீட்டனர். அந்த பெண்ணை அவர் மீட்டாலும் கூட, பெங்கின் கவலைகள் அவரது டெலிவரி செய்யப்படாத உணவு ஆர்டர்கள் மற்றும் தாமதங்களுக்கான சாத்தியமான அபராதங்கள் தான்.
ஆனால், அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், போலீசும், அலுவலக நிர்வாகமும் இணைந்து 9 லட்சம் வழங்கி உள்ளனர். அதுமட்டுமின்றி ஒரு பல்கலைக்கழகத்தில் இலவச உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பைப் பெற்றார்.
பெண்ணை காப்பாற்றியதை தொடர்ந்து பெங் பேசியதாவது ” பாலத்தின் உயரத்தை பார்க்கும் போது என்னுடைய கால்கள் நடுங்கியது. இருப்பினும், ஒவ்வொரு நொடியும் முக்கியமானது “உயிரைக் காட்டிலும் விலைமதிப்பற்றது எதுவுமில்லை, நான் குதிக்கவில்லை என்றால், அவள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை.” என கூறினார். தன்னை காப்பாற்றியதற்காக அந்த பெண் நபருக்கு நன்றி தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…