Zelensky and Joe Bidden [Image source : POTUS]
ஜப்பானில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கலந்து கொள்ள உள்ளார்.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் அடங்கிய ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் ஜப்பான் ஹிரோஷிமாவில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கலந்து கொண்டு பேச உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் காணொளி வாயிலாக பேச உள்ளார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிரென்ச் விமானம் மூலம் நேரில் கலந்து கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் ஜி7 அணிசேராத நாடுகளில் இருந்து பிரான்ஸ் ப்ரதிதிநிதியும், இந்தியா சார்பாக பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜெலென்ஸ்கி கலந்து கொள்ள உள்ளதா மூலம் உக்ரைன் நாட்டிற்கு தேவையான உதவிகளை அமெரிக்கா, இந்தியா போன்ற நாட்டு தலைவர்களை நேரில் சந்தித்து கேட்க/ ஆலோசிக்க உள்ளார் என கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது, ஜெலென்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், உக்ரைனுக்கு தேவையான விமானங்களை வழங்குவதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது. அமெரிக்காவின் ஆதரவு நாடுகளிடம் இருந்து உபகரணங்கள் வாங்குவதற்கும் அமெரிக்காவின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
விமானங்களுக்கான பயிற்சிகள் அதிக செலவுகள் ஆகியவை கூட ஜெட் விமானங்களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்காததற்கு ஒரு காரணம் என்று அமெரிக்கா முன்பு கூறியிருந்தது. இதனை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் வான் பாதுகாப்பை அதிகரிக்க செலவு குறைந்த வழிகள் இருப்பதாகவும் அதிகாரிகள் வலியுறுத்தி இருந்தனர் என்பது குறிபிடதக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…