2026க்கு ரொம்ப தூரம் இருக்கு; நாளைக்கு இருப்பமானு பார்ப்போம் – நடிகர் சரத்குமார்

நடிகர் விஜய் கல்விக்காக செய்துள்ள உதவி பாராட்டத்தக்கது என சரத்குமார் பேட்டி.
மதுரையில் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நடிகர் விஜய் கல்விக்காக செய்துள்ள உதவி பாராட்டத்தக்கது. எல்லாரும் அரசியலுக்கு வரலாம்.
இந்த ஜனநாயக நாட்டில் அனைத்து குடிமகனும் அரசியலுக்கு வரலாம். பள்ளியிலேயே 14 வயதிலேயே அரசியல் குறித்து கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம் என தெரிவித்துள்ளார். அவரிடம் 2026 தேர்தல் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், 2026க்கு ரொம்ப தூரம் இருக்கு; நாளைக்கு இருப்பமானு பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.