அதிகாரப் பசியில் இருக்கும் சந்தர்ப்பவாதிகளின் ஆலோசனைக் கூட்டம் – ரவி சங்கர் பிரசாத்

ravi sankar prasad

பெங்களூருவில் நடைபெறும் பாஜக கூட்டம் அதிகாரப் பசியில் இருக்கும் சந்தர்ப்பவாதிகளின் ஆலோசனைக் கூட்டம் என ரவி சங்கர் பிரசாத் விமர்சனம்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூனன் கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கே வரவேற்பு உரையுடன் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், 24 எதிர்க்கட்சிகள் கலந்து கொள்கின்றன.

இந்த ஆலோசனை கூட்டம் குறித்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், பெங்களூருவில் நடைபெறும் பாஜக கூட்டம் அதிகாரப் பசியில் இருக்கும் சந்தர்ப்பவாதிகளின் ஆலோசனைக் கூட்டம். டெல்லியில் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அங்கே இருந்து மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளாமல் பெங்களூரு செல்கிறார். இதுபற்றியெல்லாம் காங்கிரஸ் வாய் திறக்கவே இல்லை. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கு என்று ஒருமித்த கொள்கை ஏதும் இல்லை. ஒன்றைக் கொடுத்து ஒரு ஆதாயத்தைப் பெற்றுக் கொள்வதே அவர்களின் கொள்கை என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்