ADMK – BJP : பாஜக குறித்து பொது வெளியில் பேச வேண்டாம் – அதிமுக

அண்ணா குறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்ததையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், தமிழகத்தில் தொடர்ந்து வந்த அதிமுக – பாஜக கூட்டணி இல்லை என அறிவித்துள்ளார். இதனையடுத்து பாஜக மற்றும் அதிமுக இடையே தொடர்ந்து வார்த்தை மோதல்கள் நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில், அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை முக்கியமான பிறப்பித்துள்ளது. அதன்படி, கூட்டணி குறித்தோ, பாஜக குறித்தோ பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம். கூட்டணி நிலைபாட்டை தலைமை ஏற்கனவே கூறிவிட்ட நிலையில் வேறு யாரும் இது குறித்து பேசக்கூடாது.
மேலும், கூட்டணி பற்றி கருத்து தெரிவிக்க வேண்டாம் என மாவட்ட செயலாளர்கள் மூலம் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டுவது சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பதையும் தவிர்க்குமாறும் அதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. நிர்வாகிகள் பொதுவெளியில் கூட்டணி மற்றும் பாஜக பற்றி பேசினால் குழப்பம் ஏற்படும் என்பதால் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025