#BREAKING : பெங்களூரில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது…!

பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூனன் கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கே வரவேற்பு உரையுடன் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், 24 எதிர்க்கட்சிகள் கலந்து கொள்கின்றன. இந்த ஆலோசனையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தேர்தல் இட பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்தும், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்ப கூட்டணியில் இடங்களை ஒதுக்குவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கூட்டணிக்கு பெயர் வைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.