நடுவானில் வெடித்த மொபைல் போன்..! அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்..!

டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் மொபைல் போன் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
உதய்பூரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவரின் மொபைல் வெடித்துள்ளது. இதன்பின், விமானமானது உதய்பூரில் உள்ள தபோக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மத்தியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
பின் தபோக் விமான நிலையத்தில் அதிகாரிகளின் தீவிர சோதனைக்கு பிறகு விமானம் டெல்லிக்கு புறப்பட அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், விமானத்தில் பயணம் செய்த 140 பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த மாதம், டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக ரஷ்யாவின் மகதானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.