மஞ்சள் நிற பேருந்துகளை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நவீன வசதிகள் கொண்ட மஞ்சள் நிற அரசு பேருந்துகளை நாளை தொடங்கி வைக்கிறார். பழைய பேருந்துகளில் இருக்கை, ஜன்னல், கம்பிகள் சேதமடைந்த நிலையில் உள்ளதை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சீரமைக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு தற்போது மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் தமிழகத்தில் அரசு பேருந்துகள் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட உள்ளது. நிறம் மட்டுமன்றி, இருக்கை வசதிகளும் விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது ஆயிரம் பேருந்துகளை புதிதாக வாங்க முடிவு செய்து அதற்கான டெண்டர் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூர், திருச்சி, கரூரிலும் புதிய மஞ்சள் நிற பேருந்துகள் தயாராகி வருகின்றன.1000 புதிய பேருந்துகள் வாங்கவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.