ராகுல் காந்தி பேச்சில் ஒரு பகுதி நீக்கம் – மக்களவை செயலகம் அறிவிப்பு

RahulGandhi

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் நமபிகையில்லா தீர்மானத்தனத்தை கொண்டுவந்தனர். இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது, இன்றும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், மணிப்பூர் விவகாரத்தில் பாஜக அரசை கடுமையான விமர்சித்தார்.  மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள். மணிப்பூர் மக்களை கொன்றுவிட்டீர்கள். இந்தியாவை கொன்றுவிட்டீர்கள். நீங்கள் துரோகிகள், நீங்கள் தேசபக்தர்கள் இல்லை என ஆவேசமாக பேசினார்.

பாஜக அரசு இந்தியா என்ற கருத்தோட்டத்தையும், பாரம்பரியத்தையும் அழித்துவிட்டது. ராமாயணத்தில் கும்பகர்ணன் மற்றும் மேகநாதனின் பேச்சை மட்டுமே ராவணன் கேட்டார். இன்று அமித்ஷா மற்றும் அதானியின் பேச்சுகளை மட்டுமே கேட்கிறார் பிரதமர் மோடி. அந்த ராவணன் கூட மக்கள் பேச்சை கேட்டார். ஆனால் நீங்கள் கேட்கவில்லை என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, ராகுல் காந்தி தனது பேச்சை முடித்துக்கொண்டு செல்லும்போது அவையில் தகாத சைகை செய்துவிட்டு சென்றதாக பாஜகவை சேர்ந்த பெண் எம்பிக்கள் சபாநாயர் ஓம்பிர்லாவிடம் புகார் கடிதம் அளித்தனர். மறுபக்கம், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியது முழுமையாக வெளியாகவில்லை என காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மக்களவையில் பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆற்றிய உரையின் ஒரு பகுதி நீக்கப்பட்டது என்று மக்களவை செயலகம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி பேச்சில் இருந்து 24 வார்த்தைகளை அவைகுறிப்பில் இருந்து நீக்கி உள்ளதாகவும் மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

மணிப்பூர் பிரச்னையை தீர்க்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டதாகவும், மணிப்பூர் வன்முறை பற்றி பேசாமல் பிரதமர் மவுனம் காப்பதாகவும் அவரை தேசத்துரோகி என்றும் மணிப்பூரில் இந்தியாவை கொன்றுவிட்டதாகவும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். ராகுல் காந்தியின் உரையில் கொலை என்று குறிப்பிட்டிருந்த வார்த்தைகளை அவைகுறிப்பில் இருந்து நீக்கியுள்ளார் சபாநாயகர். மேலும், மக்களவை சபாநாயகரை குறிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசியவற்றையும் அவைகுறிப்பி இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்