சனாதன மறுப்பு என்பது கடவுள் மறுப்பு அல்ல – கே.எஸ்.அழகிரி

சென்னையில் சமீபத்தில் சனாதனம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும். இந்த சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்பது நிலையானது, அதாவது மாற்ற முடியாதது என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு கண்டனங்களும், வரவேற்பும் எழுந்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் கூறுகையில், சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்தில் நியாயம் இருக்கிறது
பெண்களை உடன்கட்டை ஏற செய்தது தான் சனாதனம்; தமிழ் மண் இதையெல்லாம் போராடி வென்ற மண்.திமுகவும், காங்கிரஸும் இந்துக்களுக்கு எதிராக பேசுவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுகிறார்; நாங்களும் இந்து மதத்தை சார்ந்தவர்கள் தான். கடவுள் மறுப்பு என்பது வேறு, மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை அகற்ற சொல்வது என்பது வேறு. சனாதன மறுப்பு என்பது கடவுள் மறுப்பு அல்ல என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025